முத்தையாபுரம் பகுதி மகளிர் அணி சார்பில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு.!
முத்தையாபுரம் பகுதி மகளிர் அணி சார்பில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு.!
தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவிழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் பகுதிச் செயலாளர் T.மேகநாதன் தலைமை வகித்தார், மண்டல தலைவர் A.பாலகுருசாமி வரவேற்புரை ஆற்றினார். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் P.கீதாஜீவன் சிறப்புரை ஆற்றினார். வணக்கத்திர்குரிய மேயர் P.ஜெகன் பெரியசாமி , மாநகர திமுக செயலாளர் S.R ஆனந்த சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் V.ஜெயகனி தலைமையில் முத்தையாபுரம் பகுதி மகளிர் அணி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மண்டல தலைவர் பால குருசாமி முன்னிலையில் 51 வது வார்டு வீரநாயக்கன் தட்டு பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் , வீரநாயக்கன் தட்டு திமுக மகளிர் அணி M.முத்துலட்சுமி (எ)ரதி தலைமையில் கட்சியில் இணைந்தனர்.