சர்வதேச போதை ஒழிப்பு தின பேரணி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைக்கும் விதமாக பதாகையில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள்,மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள்,திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அவர்கள்,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள்,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பணிமய மாதா ஆலயம் வழியாக ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடையும்