முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய நபர் மீது குற்றவியல் நடவடிக்கை: வி.சி.க. கோரிக்கை!

"தூத்துக்குடியில் முதியவரை தாக்கி, முஸ்லீம்கள் குறித்து அவதூறாக பேசிய நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வி.சி.க. கோரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய நபர் மீது குற்றவியல் நடவடிக்கை: வி.சி.க. கோரிக்கை!

"தூத்துக்குடியில் முதியவரை தாக்கி, முஸ்லீம்கள் குறித்து அவதூறாக பேசிய நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வி.சி.க. கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள்  மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்துள்ள மனு "நூத்துக்குடி மாநகரில் பிரதானமாக அமைத்திருக்கும் பிரசித்தி பெற்ற சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் (சிவன் கோவில்) வாசலில் பல்வேறு ஏழை எனிய மக்கள் மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்த்து கொண்டிருக்கின்றனர். இந்த கோயிலை சுற்றி பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான கானொளி காட்சியில் ஒரு வயது முதிர்ந்த முதியவர் நடக்கக்கூட முடியாத தவழ்ந்த நிலையில் சிவன் கோவில் வாசலில் யாசகம் பெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் அம்முதியவரை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து துன்புறுத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. 

மேலும் அவர் அந்த முதியவரை பார்த்து "ஏன் இங்கு வந்திருக்கிறாய். யார் நீ தாடி வைத்திருக்கிறாய் முஸ்லிம் தானே நீ கோவிலுக்கு பாம் வைக்க வந்திருக்கிறாயா?" என்று மிரட்டும் தொனியில் அவதூறாக மத துவேசத்தை பரப்பும் வகையில் பேசுகிறார்.. இவ்வாறு இஸ்லாமிய சமுதாயத்தை கொச்சைப் படுத்தும் வகையில் மத துவேசத்தை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில் அவதூறாக பேசிய நபர் மீது காவல் துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Also Read...