விலையில்லா பித்தளை தேய்ப்புப் பெட்டி பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் சலவையாளர்கள் பித்தளை சலவைப்பெட்டி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சலவையாளர்கள் பித்தளை சலவைப்பெட்டி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சலவை தொழில் புரிந்து வரும் சலவையாளர்கள், கடைகள் மற்றும் தள்ளுவண்டியில் தேய்ப்புப் பெட்டி மூலம் வருமானம் ஈட்டுபவர்களும் விலையில்லா தேய்ப்புப் பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்:
பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு - 20 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். மேற்படி பயனடைய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அரசின் விலையில்லா சலவைப்பெட்டி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.