தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வக்கில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

தூத்துக்குடி வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம்

தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வக்கில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் படுகொலை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். நேற்று சோரீஸ் புரம் பகுதியில் வைத்து அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read...தூத்துக்குடியில் பட்ட பகலில் பயங்கரம்... வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!

இந்நிலையில், வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் யாரும் ஆஜராக கூடாது என்று வலியுறுத்தியும் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். 

மேலும், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் செல்வின் பர்ணாந்து, செயலாளர் மார்க், வழக்கறிஞர்கள் யுஎஸ் சேகர், சுரேஷ்குமார், அதிசயகுமார், மாடசாமி, எஸ்எஸ்பி அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வழக்கறிஞர்கள் திடீரென பாளை., ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். 

இதைத் தொடர்ந்து டவுன் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம் ஐயப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கெங்கநாத பாண்டியன் மற்றும் போலீசார் பேச்சுவாத்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை தொடர்ந்து பணி புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் தெரிவித்தார்.

செய்திக் கான வீடியோவை கான