தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற 19ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூய மரியன்னை கல்லூரி இணைந்து வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 19.07.2025 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8- ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுநிலை பட்டதாரி, B.E., Diploma, Nursing, ITI படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். 

இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Thoothukudi Employment Office என்ற Telegram Channel -ல் இணையவும். உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு Thoothukudi Employment Office என Search செய்தால் Channel தோன்றும். அதன் உள் நுழைந்து Join என்பதனை Click செய்து எளிதில் Channel -ல் இணைந்தும், இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deo.tut.jobfair@gmail.com அல்லது தொலைபேசி எண் 0461-2340159ஐ தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம். 

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் Tamilnadu Private Job Portal (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள் (JOB SEEKERS) எனில் CANDIDATE LOGIN -இல் பதிவுச் செய்யவும், வேலையளிப்பவர்கள் (Employer) எனில் EMPLOYER LOGIN -இல் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.