பழையகாயல் அருகே டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழப்பு... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

பழையகாயல் அருகே டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழப்பு... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த சுடலைமணியின் மகன் சுதர்சன் (18), கடந்த ஜூன் 29 அன்று சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பழையகாயலில் இருந்து கணேஷ் நகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்று (ஜூலை 3) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்த சுதர்சனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருச்செந்தூர் பிரதான சாலை பழையகாயல் அருகே சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டம் தொடர்பாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.