விளாத்திகுளம் வட்டாட்சியாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!
தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வட்டாட்சியாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வட்டாட்சியாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் "வைப்பார் ஆற்றில் 3 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கவேண்டிய இடத்தில் தற்பொழுது 30 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டு வருகிறது. விளாத்திகுளம் வட்டாட்சியாரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதியில் அரசு அனுமதி பெறாமல் தனியார் நிறுவனம் அரசு புறம்போக்கு நீர்பிடிப்பு ஓடை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து மின் இணைப்பு தூண் அமைத்து மற்றும் காத்தாடி நிறுவி வருகிறது. வைப்பார் பஞ்சாயத்துக்குட்பட்ட கலைஞானபுரம், துலுக்கன்குளம் கண்மாய் ஆகியவற்றை காணவில்லை. கண்மாய் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் 7 தனியார் நிறுவனங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இறால் பண்ணை, உப்பளம் அமைத்து வருகிறது.
கிராம தலையாரி காலி பணியிடத்திற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் ஒரு மாற்றுதிறனாளிக்கு கூட பணி வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு முறைகேடுகள் செய்து தனியார் நிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்படும் விளாத்திகுளம் வட்டாட்சியார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.