தூத்துக்குடி சாலையோர வியாபாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! ₹15,000 முதல் ₹50,000 வரை கடன் – செப்.9 முதல் சிறப்பு முகாம்!

தூத்துக்குடி சாலையோர வியாபாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! ₹15,000 முதல் ₹50,000 வரை கடன் – செப்.9 முதல் சிறப்பு முகாம்!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ‘பிஎம் ஸ்வாநிதி’ (PM SVANidhi) திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள சாலையோர சிறு, குறு வியாபாரிகளுக்கு எளிமையான முறையில் வங்கிக் கடன் கிடைக்கும் வகையில் இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாம்கள் தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. செப்டம்பர் 9, 10, 11, 17, 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வியாபாரத்தை விரிவுபடுத்தும் வகையில் 3 தவணைகளாக கடனுதவி வழங்கப்படுகிறது:

முதல் தவணை – ₹15,000

இரண்டாம் தவணை – ₹25,000

மூன்றாம் தவணை – ₹50,000

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

காய்கறி, பழங்கள், மீன், பூக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளி, புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், தையல், டீ, காபி, தின்பண்டங்கள், உணவகம், காலணிகள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சாலையோர வியாபாரங்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

???? தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிக்க வரும் வியாபாரிகள் கீழ்கண்ட ஆவணங்களின் நகல்களை கொண்டு வர வேண்டும்:

ஆதார் அட்டை நகல்

ஸ்மார்ட் கார்டு / குடும்ப அட்டை நகல்

பான் கார்டு நகல்

வங்கி பாஸ்புக் நகல்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

வியாபாரம் செய்யும் நேரடி புகைப்படம்

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, தேவையான ஆவணங்களுடன் கலந்து கொண்டு கடனுதவி பெற்றுப் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.