திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா காவல்துறை சார்பில் க்யூஆர் குறியீடு அறிமுகம்!
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்ப்பட்டுள்ள காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள்/வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் க்யூ ஆர் கோடு (QR Code) மற்றும் லிங்க் (link) மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
இந்த க்யூ ஆர் கோர்டு அல்லது லிங்க் மூலம் அதிலுள்ள இணையதள பக்கதின் மூலம் மேற்படி அத்தியாவசியத் தகவல்களைக் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொண்டு பயன்பெறலாம்.