தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீது கப்பல் மோதி விபத்து: கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு!!
தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீது கப்பல் மோதியதில் கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீது கப்பல் மோதியதில் கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கொம்புதுரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2பேரை மீட்டு அவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் திரேஸ்புரம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயபால் (47), அண்டோ (45) எனத் தெரியவந்தது. அவர்கள் கடந்த 17ம் தூத்துக்குடியில் இருந்து மேட்டுபட்டியைச் சேர்ந்த ஷேக் முகம்மது (40) என்பவருடன் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர்களது படகு மீது கப்பல் மோதியதில் மூவரும் கடலுக்குள் விழுந்ததாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மரைன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் விழுந்த ஷேக் முகம்மது என்பவரை தேடும் பணி நடந்து வருகிறது.