கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு!

கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு!

கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக கிங்ஸ்லி தேவ் ஆனந்த் பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் நெல்லை சரக டி.ஐ.ஜி. மற்றும் தென் மண்டல ஐ.ஜி.க்கு வந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் ஆனந்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ரம்யாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

--------------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :-

WHATSAPP GROUP LINK 2 :-

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :-