மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை!
குளத்தூர் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குளத்தூர் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வி.சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் சிவகுமார் (45). கூலித் தொழிலாளி. இவர் தினசரி வீட்டுக்கு மது குடித்து விட்டு வருவாராம். இதனால் அவரது மனைவி அவரை கண்டித்து உள்ளார். இதில் மனவேதனையடைந்த சிவகுமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.