தூத்துக்குடியில் மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா: தூத்துக்குடி, மதுரை எம்பிக்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2020 21 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 11 ஆம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் உள்ள டி.கே.எஸ் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா: தூத்துக்குடி, மதுரை எம்பிக்கள் பங்கேற்பு!
தூத்துக்குடியில் மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா: தூத்துக்குடி, மதுரை எம்பிக்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2020 21 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 11 ஆம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் உள்ள டி.கே.எஸ் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலை இலக்கியத்தில் சிறந்த படைப்பாளிகளுக்கு கலை இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 202021 ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் உள்ள டி கே எஸ் அரங்கில் வைத்து சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சைதை.ஜே வரவேற்பு உரை ஆற்றினார். இந்நிகழ்வினை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் வெண்புறா, ஜெயகாந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினர். 

அதனை தொடர்ந்து தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் நடைபெற்ற விருதளிப்பு விழா, கலை மாலை நிகழ்ச்சிக்கு வரவேற்பு குழு தலைவரும், வ உ சி கல்லூரி முதல்வருமான‌ முனைவர் சோ வீரபாகு அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புரு தலைவருமான சு. வெங்கடேசன் எம்பி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் விருது வழங்கி சிறப்புரை ஆற்றினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் கு ராமசுப்பு நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வுகளை தமுஎகச மாநில நிர்வாகிகள் லெட்சுமிகாந்தன், உதயசங்கர் ஆகியோர் ஒருங்கினைத்து வழங்கினர்.

இவ்விழாவில் முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான சின்ன பாரதி அறக்கட்டளை விருது ரூ.1 லட்சம் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது, சிறந்த தொன்மை சார் நூலுக்கான கே.முத்தையா நினைவு விருது "வடசென்னை  வரலாறும் வாழ்வியலும்" நூலுக்காக‌ நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கும், சிறந்த நாவல் நூலுக்கான‌ கே.பி.பாலச்சந்திரன் நினைவு விருது "உண்மைகள் பொய்கள் கற்பனைகள்" நூலுக்காக‌ அரிசங்கர் அவர்களுக்கும், சிறந்த விளிம்பு நிலை மக்கள் குறித்த படைப்புக்கான‌ சுமுத்திரம் நினைவு விருது "அணங்கு" நூலுக்காக‌ அருண்பாண்டியன் மனோகரன் அவர்களுக்கும், சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான‌ ரா.நாகசுந்தரம் நினைவு விருது "அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்" நூலுக்காக சுகுணா திவாகரன் அவர்களுக்கும், சிறந்த கவிதை தொகுப்பு க்கான‌ வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் செல்லம்மாள் ஜெகந்நாதன் நினைவு விருது "பியானோவின் நறும்புகை" நூலுக்காக நிலா கண்ணன் அவர்களுக்கும்,

சிறந்த சிறுகதைக்கான‌ அகிலா சேதுராமன் நினைவு விருது "திமிரி" நூலுக்காக கிருத்திகா அவர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் விருது "யாத்வேஷம்"  "நேமி சந்திரா" நூலுகாக தமிழில் மொழிப்பெயர்த்த கே.நல்லதம்பி அவர்களுக்கும், சிறந்த மொழி வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது "செந்தமிழ் நூல்களில் இணையவழிப் பெயர்கள்" நூலுக்காக முனைவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கும், சிறந்த குழந்தைகள் இலக்கிய நூலுக்கான ராஜபாளையம் மணிமேகலை மன்றம் கோதண்டம் விருது "மந்திர கிளுகிளுப்பை" நூலுக்காக சரிதா அவர்களுக்கும், சிறந்த குறும்படத்திற்கான‌ ராமச்சந்திரன் நினைவு விருது "தித்திப்பு" படத்திற்காக‌ திருஞானம் அவர்களுக்கும், சிறந்த ஆவணப்படத்திற்கான என் பி நல்லசிவம் ரத்தினம் நினைவு விருது "லேண்ட் ஆப் பீஃப்" ஆவணப்படத்திற்கு மதன்குமார் அவர்களுக்கும், அமரர் மூசி கருப்பையா பாரதி ஆனந்த சரஸ்வதி அம்மாள் நாட்டுப்புற கலைச்சுடர் விருது பி முத்துச்சந்திரன் அவர்களுக்கும், மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது வைகறை கோவிந்தன் அவர்களுக்கும், முனைவர் பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது மங்கை அவர்களுக்கும், மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண் படைப்பாலுமை விருது பா ஜீவசுந்தரி அவர்களுக்கும் ஆகிய‌ 16 விருதுகள் மற்றும் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கலை மாலை நிகழ்ச்சியில் தவில் விநாயகத்தின் இசை முழங்க, புதுச்சேரி உமா, திருவுடையான் தண்டபாணி, முத்துச்சிப்பி தாமோதரன், ஆகியோரின் நாட்டுப்புற பாடல்கள்,  முத்து சந்திரன் அவர்களின் தோல்பாவை கூத்து, நாடகங்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரவேற்பு குழு துணை தலைவர் நா.வெங்கடேசன், செயலர் சுப்ரமணியன், துணைச் செயலாளர் விக்னேஷ்வரன், பொருளாளர் சிவனாகரன் உள்ளிட்ட வரவேற்புக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.