தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது : 2 வாகனங்கள் மீட்பு!

தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது : 2 வாகனங்கள் மீட்பு!

தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியைச் சேர்ந்தவர் ராகவன் மகன் ஜான் (40), இவர் கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு கடை முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடுபோயிருப்பது தெரியவந்தது 

இது குறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ஜெய்சந்திரன் (40) மற்றும் 17 வயது இளம்சிறாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள், ஜான் பைக்கையும், தூத்துக்குடி டிஆர் தெருவை சேர்ந்த நம்பி மகன் சிவசுப்பிரமணியன் (55) என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இளஞ்சிறார் உட்பட 2பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.