தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபானம் திருட்டு... பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபானம் திருட்டு... பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

தூத்துக்குடியில் இரும்பு கம்பியை வைத்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பிரபல ரவுடி மது பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாநகரின் இரண்டாம் கேட் அருகே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அரசு மதுபான கடை ஒன்று இந்த மதுபான கடையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் மதுபான கிட்டங்கியிலிருந்து மதுபானங்கள் லாரியில் வந்து இறக்கப்பட்டு கொண்டிருந்தது. இதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் கடையின் கதவை திறந்து வைத்து மதுபான பெட்டிகளை கடைக்குள் இறக்கி வைத்துவிட்டு லாரி மற்றும் ஊழியர்கள் சென்றுள்ளனர் 

இதைத் தொடர்ந்து திடீரென அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி ஜேம்ஸ் என்ற நபர் இரும்பு கம்பியுடன் மது போதையில் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டியவாறு கடைக்குள் இருந்த பெட்டியில் இருந்து சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை எடுத்து சென்றுள்ளார். இதை தடுக்க முயன்ற டாஸ்மாக் ஊழியர்களை அவர் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளதுடன் கல்லாலும் தாக்க முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம்தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இதே போன்று இந்த கடையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ஜேம்ஸ் சுமார் 5000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை எடுத்துச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

தூத்துக்குடியில் அரசு மதுபான கடையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவல் துறை இந்த விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ரவுடியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.