விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்த எம்.எல்.ஏ!!

விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்த எம்.எல்.ஏ!!

விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை அவ்வழியாக சென்ற விளாத்திகுளம் எம்.எல்.ஏ  உடனடியாக  மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(30) . இவர் விளாத்திகுளம் அருகே உள்ள  குருவார்ப்பட்டி கோவில் திருவிழாவிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எட்டையபுரம் - விளாத்திகுளம்  சாலையில் எதிரே வந்த கார் மீது மோதி  விபத்துக்குள்ளானார். 

இந்நிலையில்  எட்டயபுரத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் சாலையில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி இருப்பதை பார்த்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் விபத்தில் சிக்கிய  இளைஞருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து  மருத்துவரிடம் போன் மூலம் கேட்டறிந்தார்.