தூத்துக்குடியில் பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பூங்காவில் தூக்கில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செல்சீனி காலனியில் உள்ள பூங்காவில் வேப்பரத்தில் ஒருவர் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் பிரையன்ட் நகர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (67) என்று தெரியவந்தது. அவர் தற்காெலை செய்தாரா? அல்லது அவரது மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE