திருச்செந்தூா் நீதிமன்றத்தில் இணைய வழி சட்ட உதவி மையம் திறப்புவிழா!!

திருச்செந்தூா் நீதிமன்றத்தில் இணைய வழி சட்ட உதவி மையம் திறப்புவிழா!!

திருச்செந்தூா் நீதிமன்றத்தில் இணைய வழி சட்ட உதவி மையம் திறப்புவிழா!!

திருச்செந்தூா் நீதிமன்றத்தில் இணைய வழி சட்ட உதவி மையம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக சட்ட உதவி ஆணையத்தின் நிா்வாக தலைவரும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான வைத்தியநாதன், திருச்செந்தூா் தாலுகா இணைய வழி சட்ட உதவி மையத்தை திறந்துவைத்து பேசியதாவது: தமிழகத்தில் தாலுகா அளவிலான இந்த இணைய வழி சட்ட உதவி மையம் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மக்கள் சட்ட ஆலோசனைகள் பெற முடியும். நீதிமன்றத்திற்கோ, இலவச சட்ட உதவி மையத்திற்கோ நேரில் வரத் தேவையில்லை. 

சட்டமையத்தை 7200872588 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இம்மையம் செயல்படும். காணொலி அல்லது வாட்ஸ் ஆப் மூலமும் இதன் எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். திருச்செந்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வேண்டும் என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கோரிக்கை வைத்தாா்; அதற்கு நான் முயற்சிப்பேன் என்றாா்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான செல்வம் வரவேற்றாா். தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைய குழுவின் உறுப்பினரும் செயலருமான மாவட்ட நீதிபதி நசீா் அகமது, தூத்துக்குடி மக்கள் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி, முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் செல்வகுமாா், நீதிபதிகள் பிஸ்மிதா, வரதராஜன், முத்துச்செல்வி, திருச்செந்தூா் வழக்கறிஞா்கள் சங்க தலைவா் ஜேசுராஜ், மூத்த வழக்குரைஞா் சந்திரசேகரன், சங்கச் செயலா் முத்துக்குமாா், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். சுற்றுபுறச் சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திருச்செந்தூா் சப் கோா்ட் நீதிபதி வஷித்குமாா் நன்றி கூறினாா்.