உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா..? அப்போ இதை குடிங்க போதும்..!
உடல் நோயின்றி ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டுமானால், உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
உடல் நோயின்றி ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டுமானால், உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சில கெட்ட பழக்கங்களால் உடலினுள் தீங்குவிளைவிக்கும் நச்சுக்கள் தினந்தோறும் தேங்குகின்றன. இப்படி உடலில் நச்சுக்கள் அதிகரிக்கும் போது, அது பல நோய்களை உடலில் வரவழைக்கும். அதனால் தான் இன்று பலர் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளால் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், முதலில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற நிறைய பானங்கள் உதவி புரியும். அந்த பானங்களை தினமும் குடித்து வந்தால், உடலினுள் நச்சுக்கள் தேங்குவதைத் தவிர்க்கலாம். முக்கியமாக கல்லீரல் சுத்தம் மிகவும் இன்றியமையாதது. கல்லீரல் சுத்தமாக இல்லாவிட்டால், அது செரிமானத்தை பாதிப்பதோடு, கொழுப்புக்கள் வளர்சிதை மாற்றம் செய்யப்படுவதில் சிக்கல்கள் ஏற்படும். இப்போது கல்லீரலை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்ய உதவும் சில பானங்களைக் காண்போம். அவற்றில் ஒன்றை தினமும் குடித்து வந்தால், உடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.
புதினா டீ
புதினாவில் மென்தால் மற்றும் மென்தான் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. இந்த எண்ணெய்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, செரிமானம் சீராக நடைபெறச் செய்கிறது. அத்தகைய புதினாவை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, மூடி வைத்து, பின் அதை வடிகட்ட வேண்டும். பின் அந்த புதினா டீயை இரவு தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை டீ
இஞ்சி மற்றும் எலுமிச்சை டீ வயிற்று உப்புச பிரச்சனையில் இருந்து விடுவிப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. இந்த டீயை தயாரிப்பதற்கு, கொதிக்கும் நீரில், ஒரு துண்டு இஞ்சியை தட்டி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் பாதி எலுமிச்சை சாற்றினை பிழிந்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி, இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடிப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுக்கள் அவ்வப்போது வெளியேறிவிடும்.
வெந்தய நீர்
வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, செரிமான மண்டலமும் வலுவடையும். அதுவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வெந்தய நீரை தயாரித்து குடிப்பதே சிறந்த வழி. அதற்கு கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து கிளறி இறக்கி, வடிகட்டி, அந்த நீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். இல்லாவிட்டால், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மஞ்சள் நீர்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு அற்புதமான பானம் தான் மஞ்சள் டீ. அதற்கு ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ-க்கு பதிலா குடிக்க வேண்டும்.
சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நச்சு நீக்கும் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, அதில் சிறிது சீமைச்சாமந்தி பூக்களை சேர்த்து, 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடலில் நச்சுக்கள் சேர்வது தடுக்கப்பட்டு, உடலும் ஆரோக்கியமாக மற்றும் சுத்தமாக இருக்கும்.