ஜனநாயகன் டிக்கெட் இலவசம்: தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு!

ஜனநாயகன் டிக்கெட் இலவசம்: தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு!

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று தவெக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள வீடியோவில் "த.வெக. தலைவரின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் வெளியிட்டை மிகவும் பிரமாண்டமாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு ஜனநாயகன் திரைப்படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கோவில்பட்டியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.