முத்தையாபுரம் அருகே மதுகுடிக்க ஆசைப்பட்டு சென்றவருக்கு அரிவாள் வெட்டு : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

முத்தையாபுரம் அருகே மதுகுடிக்க ஆசைப்பட்டு சென்றவருக்கு அரிவாள் வெட்டு : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

முத்தையாபுரம் அருகே மதுகுடிக்க ஆசைப்பட்டு சென்றவருக்கு அரிவாள் வெட்டு : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

 முத்தையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உப்பள தொழிலாளியை அருவாளால் வெட்டிய மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முடுக்குக்காடு கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் மகன் அபிமன்னன் (வயது 42). உப்பளத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான நாகராஜ் என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முத்தையாபுரம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் அஜித் சண்டை போட்டுள்ளார். அப்போது அபிமண்ணன் அஜித்தை சத்தம் போட்டுள்ளார்.

இந்நிலையில் அஜித் அபிமண்ணனை மது குடிக்க அழைத்துள்ளார். மது குடிக்க ஆசைப்பட்டு அஜித்துடன் உப்பள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் வந்த பெயர் தெரியாத நபர் அபிமண்ணை மடக்கி பிடித்துள்ளார். அஜித் மற்றும் அவரது நண்பரான முத்தையாபுரம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் தர்மராஜ் @ பாவாடை ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து மேற்படி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிமண்ணன் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.