காலையில் வைத்த கோரிக்கையை மாலைக்குள் நிறைவேற்றிய கனிமொழி எம்பி!
புதுக்கோட்டை அருகே காலையில் வைத்த கோரிக்கையை மாலைக்குள் நிறைவேற்றிய கனிமொழி எம்பிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களுடன், நன்றி தெரிவித்தனர்.
புதுக்கோட்டை அருகே காலையில் வைத்த கோரிக்கையை மாலைக்குள் நிறைவேற்றிய கனிமொழி எம்பிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களுடன், நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் மற்றும் மூதாட்டி ஒருவரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களிடம் மே 1 ஆம் தேதி காலை கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து மே 1 ஆம் தேதி மாலைக்குள் கனிமொழி எம்.பி அவர்களின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது.