தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!!
வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்றஇந்த ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் தனசேகா் டேவிட் தலைமை வகித்தாா். செயலா் செல்வின் முன்னிலை வகித்தாா்.
சென்னையில் வழக்குரைஞா் கௌதமன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் குற்றவியல் நடைமுறை சட்டங்களில் கொண்டு வந்துள்ள திருத்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கையில்லையெனில், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
------------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE