தூத்துக்குடியில் உள்ளாட்சி துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

தூத்துக்குடியில் உள்ளாட்சி துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரசாண 2டி என்.62 ஐயும், உயர்நீதிமன்ற தீர்ப்பையும் அமல்படுத்த வேண்டும், தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.763, நகராட்சியில் ரூ. 687, பேரூராட்சியில் ரூ.610, ஊராட்சியில் ரூ.462 ஊதியம் வழங்க வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சியில் 1.07.2019 ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட 89 தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும், ஊராட்சிகளில் தூய்மை காவலர், ஓ.ஹெட்ச்.டி ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்து பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலங்களை ஒரு மாதத்திற்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல் பேசினார். சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து சிறப்புரை ஆற்றினார். சிஐடியு நிர்வாகிகள் கட்டுமானம் சொ.மாரியப்பன், உப்பு சங்கம் சங்கரன், ஆட்டொ சங்கம் முருகன், துறைமுகம் காசி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட இணைச்செயலாளர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து சிஐடியு ஊராட்சி உள்ளாட்சி துறை ஒன்றிய சங்க மாவட்ட துணை தலைவர் பூலான் நன்றி கூறினார்.