அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூன் 26-க்கு ஒத்திவைப்பு
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சரின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த ராமகிருஷ்;ணன், ஆனந்த மகேஸ்வரன் மற்றும் சகோதரர்கள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஜின்னா அமலாக்க த்துறை மனுவிற்கு எதிராக ஆஜராகி வாதாடினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமலாக்கத் துறை வழக்குரைஞர் ரமேஷ் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஐயப்பன், இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
--------------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...