அரசு பள்ளி முன்பருவ ஆசிரியர்களுக்கு ரூ.25,000 காலமுறை ஊதியம் கோரி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு பள்ளி முன்பருவ ஆசிரியர்களுக்கு ரூ.25,000 காலமுறை ஊதியம் கோரி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் முன்பருவக் கல்வி (LKG & UKG) ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முன்பருவ கல்வி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு 2022ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகளை நடத்துவதற்காக 2000க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்களை மாதம் ரூ.5000 ஊதியத்தில் நியமனம் செய்தது.

ஆனால், தற்போதைய வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டால் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே,

மாதம் ரூ.25,000 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்பருவ கல்வி ஆசிரியர் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.