தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிப்பு!

மழை வெள்ளம் காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்திற்குச் சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அனல் மின் நிலையப் பகுதிக்கு கடல் நீர்வரத்து கால்வாய் சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் அந்தக் கால்வாயில் சாம்பல் கழிவுகள் உள்ளே புகுந்து கடல் நீர் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் 3 யூனிட்டுகளிலும் சுமார் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய ஊழியர்கள், சாம்பல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.