முதல்மைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டி: துாத்துக்குடி மாவட்ட அணி முதலிடம்!

முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் (கல்லூரி பிரிவு) துாத்துக்குடி மாவட்ட அணி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

முதல்மைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டி: துாத்துக்குடி மாவட்ட அணி முதலிடம்!

முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் (கல்லூரி பிரிவு) துாத்துக்குடி மாவட்ட அணி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

சென்னை போரூர் ராமச்சந்திர மெடிக்கல் கல்லுாரி மைதானத்தில் போட்டிகள் நடந்தன. இதில், 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டன. முதலில் நடந்த நாக் அவுட் சுற்றில் துாத்துக்குடி, கோவை, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய 4 அணிகள் இறுதி லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.  முதல் 4 இடங்களை நிர்ணயிப்பதற்கான லீக் போட்டிகள் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 3 போட்டிகளில் விளையாடின. 

இதில், துாத்துக்குடி அணி 9-1 என்ற கணக்கில் கோவை மாவட்டத்தையும், 5-0 என்ற கோல் கணக்கில் திருச்சி மாவட்டத்தையும், 7-2 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு அணியையும் வென்று தோல்வியை தழுவாமல் முதல் பரிசான ரூ. 9 லட்சத்தை தட்டிச் சென்றது. 

துாத்துக்குடி அணியில் விளையாடிய ஹாக்கி வீரர்களில் திவாகர், மதுபாலன், சாமுவேல் ராஜ்குமார், முத்துக்குமார், திலிபன், நிதி தேவ அருள், மனோஜ்குமார், சண்முகம் ஆகிய 8 வீரர்கள் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற துாத்துக்குடி அணி வீரர்களையும், அணி பயிற்சியாளர் முத்துக்குமார், அணி  மேலாளர் சிவா ஆகியோரை கோவில்பட்டி ஹாக்கி வீரர்கள் பாராட்டினர்.