தூத்துக்குடியில் டிசம்பர் 11 ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி : ஆட்சியர் தகவல்..!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (08.12.2025) சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026 தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் 2026 ஆனது 01-01-2026 ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. சிறப்பு தீவிர திருத்த பணியில் தற்போது அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும், தங்களது சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடம் 2-12-2025 முதல் 3-12-2025 வரை கூட்டம் நடத்தி தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாகங்கள் வாரியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில், ASDD (குடியிருப்பு இல்லாத /நிரந்தர குடி பெயர்ந்த/இறந்த /இரட்டை பதிவு) பட்டியலினை வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் பகிர்ந்து, அதில் ஏதேனும் ஆட்பேசணை ஏதும் இருப்பின், அதனை திருத்தி பதிவேற்றும் வகைக்காக வழங்கப்பட்டு, அப்பட்டியல் தொடர்பாக ஆட்சேபணைகளை 8-12-2025ற்குள் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்பட்டது.
மீண்டும் ஒரு வாய்ப்பாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தங்களது பாகத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் கூட்டம் ஒன்றினை 6-12-2025 அன்று நடத்தி அதில் தங்களது பாகத்தில் உள்ள ASDD (குடியிருப்பு இல்லாத / நிரந்தர குடி பெயர்ந்த/இறந்த /இரட்டை பதிவு) பட்டியலினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து, அக்கூட்ட நடிவடிக்கைகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தளித்தனர்.
அதனை இக்கூட்டத்தில், ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின், 8-12-2025-க்குள் உரிய ஆவணங்களுடன் அளிக்கும் பட்சத்தில், அதனை சரிபார்த்து வாக்குச் சாவடி நிலை அலுவலர் செயலியில் உரிய மாற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் சிறப்பு தீவிர திருத்திய கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை 16-12-2025 முதல் அளித்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது அரசியல் கட்சியினைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் இருந்து ASDD பட்டியல் குறித்து ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் உரிய ஆதராங்களுடன் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நிவரத்தி செய்யப்படும். மேலும் இக்கோரிக்கைகளை உரிமைக்கோரல் மற்றும் ஆட்சேபனை காலத்தில் மனுக்கள் தாக்கல் செய்தும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிப்பார்ப்பு பணியானது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் 11-12-2025 காலை 9 மணி முதல் தொடங்கி இப்பணி முடிவடையும் நாள் வரை அரசு விடுமுறை நாள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை தவிர) நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த 2024ம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வைப்பீடு செய்யப்பட்ட சி மற்றும் டி பிரிவு மின்னணு வாக்குப் பதிவு (Ballot Unit -789, Control Unit- 438. VVPAT-536 @ 1763)-8 09-12-2025 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய முதல் தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் உள்ள வைப்பறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறந்து எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள EVM-VVPAT கிடங்கிற்கு GPS பொருத்தப்பட்ட மூடப்பட்ட வாகனம் மூலம் உரிய காவல் பாதுகாப்புடன் மாற்றம் செய்யப்பட உள்ளது.
பின் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை திறந்து பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி வாரியான தனித்தனி வைப்பறைகளும் திறக்கப்பட உள்ளது.
மேலும் ஜனவரி -2026 மாத்திற்கான காலாண்டு தணிக்கையும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிநிதிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 11.12.2025 அன்று காலை 9 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள EVM-VVPAT கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் Ballot Unit 3786), Control Unit--1985, VVPAT-2112 மொத்தம் 7883) மற்றும் புதுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலிருந்து எடுத்து வரப்படும் C மற்றும் D வகை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் Ballot Unit 789
) கட்டுப்பாட்டு அலகு -438, VVPAT -536 @ 1763)
9646 (வாக்குச்சீட்டு அலகு -4575, கட்டுப்பாட்டு அலகு-438-2423- VVPAT 2648)
நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்ப்பு செய்யும் பணி நடைபெற உள்ளது.
மேற்படி பணி 11.12.2025 அன்று காலை 9 மணி முதல் தொடங்கவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியின்போது கட்சித் தலைவர்களோ அல்லது கட்சியின் பிரதிநிதிகளோ கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், முதல் நிலை சரிப்பார்ப்பு பணியின் போது முதல் நிலை சரிப்பார்ப்பு அறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி யில்லை மற்றும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை கொண்டு வந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்பதால், முதல் நிலை சரிப்பார்ப்பு பணியின் போது தங்களது கட்சியின் பிரநிதிகளை பாஸ்போர்ட் அல்லது ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் ஒன்றினை கொண்டு வந்து அந்த புகைப்பட அடையாள அட்டை மூலம் முதல் நிலை சரிப்பார்ப்பு பணியினை கண்காணித்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.இரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி சி.ப்ரியங்கா. இ.ஆ.ப.. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சேதுராமலிங்கம், கோவில்பட்டி சார் ஆட்சியர் திரு.ஹிமான்ஷீ மங்கள், இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.மி.பிரபு (தூத்துக்குடி).திரு.கௌதம் (திருச்செந்தூர்). உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.தி.புவனேஷ்ராம். இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.மகேந்திரன் மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. திரு. L. அக்னல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக திரு.N.G. ராஜேந்திரன். CPI (M) திரு. D.ராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக திரு.ஐ.ரவி, மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் திரு.P.சரவணபெருமாள், அஇஅதிமுக மாவட்ட கழக அலுவலக உதவியாளர் திரு.ஏ.சகாயராஜா, ஒன்றிய கழகச் செயலாளர் திரு. K.K.R. ஜெயக்கொடி, பிஜேபி தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு.R.பிரபு, மாநகர் மாவட்ட காங். தலைவர் திரு.C.S.முரளிதரன், தூத்துக்கு தெற்கு & வடக்கு திரு.R. முத்துமணி, தே.மு.தி.க திரு. A.செல்வம், V.P.செல்வகுமார், CS செந்தூர் மணி. நாம் தமிழர் கட்சி, திருசெந்தூர் தொகுதி திரு.ஆ.செல்வராஜ், நாம் தமிழர் கட்சி தொகுதித்தலைவர், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி திரு.இரா.தங்கமாரியப்பன். அதிமுக திரு.K.ஆறுமுகசாமி, ஓட்டப்பிடாரம் அதிமுக திரு.P.மோகன், தேமுதிக, ஸ்ரீவைகுண்டம் மகளிர் அணி திரு.S.பேச்சியம்மாள், பாரதிய ஜனதா கட்சி, தூத்துக்குடி தொகுதி திரு.S.சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.