தலைமை ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

கயத்தாறு அருகே பள்ளியின் தலைமை ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம் கிராமத்தில், நாசரேத் திருமண்டல சேகரத்துக்கு உள்பட்ட டி.என்.டி.டி.ஏ. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 106 மாணவா்-மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ஆபிரகாம், தெற்கு மயிலோடையில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து அவரது பணியிட மாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த கிராமத்தினர், பள்ளியை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் காசிலிங்கம் மற்றும் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி குழந்தைகளை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர். தலைமை ஆசிரியரின் இடமாற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், நிா்வாகம் மூலம் இப் பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டாரக் கல்வி அலுவலா் கணேசன் உறுதியளித்தாா். இதையடுத்து கிராமத்தினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.