தூத்துக்குடியில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு – ஆண், பெண், மீனவ இளைஞர்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு – ஆண், பெண், மீனவ இளைஞர்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஊர்க்காவல் படையில் 19 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 22 பேரும், மேலும் மீனவ இளைஞர் ஊர்க்காவல் படையில் 5 பேர் (ஆண்கள் மட்டும்) என மொத்தம் 27 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்குள் உள்ள, உடல் தகுதியுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் கடலில் நீச்சல் அடிக்க தெரிந்தவர்களாகவும், மீனவர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பிரிவில் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள், பயோடேட்டா, கல்வி மற்றும் வயது சான்றிதழ்களின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (2), சுய முகவரி குறிப்பிடப்பட்ட அஞ்சல் அட்டை ஆகியவற்றுடன் கூடிய விருப்ப மனுவை வரும் 12.02.2026ம் தேதிக்குள், தூத்துக்குடி மில்லர்புரம் ஆயுதப்படை காவல் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பெறப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் அஞ்சல் அட்டையின் மூலம் தேதி குறிப்பிடப்பட்டு தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.