சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள்தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

விளாத்திகுளம் அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சூரங்குடி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் செல்வம் (48). தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விளாத்திகுளும் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். 

விளாத்திகுளம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.  இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அரசு வக்கீல் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.