BC, MBC, DNT பிரிவினருக்கு பிப்.9, 14இல் கடனுதவி முகாம்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா், கோவில்பட்டி பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினருக்கு இம்மாதம் 9, 14இல் கடனுதவி முகாம் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா், கோவில்பட்டி பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினருக்கு இம்மாதம் 9, 14இல் கடனுதவி முகாம் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா், கோவில்பட்டி பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினருக்கு இம்மாதம் 9, 14இல் கடனுதவி முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு வணிகக் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன் ஆகியவை ரூ. 10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. அதன்படி, கடனுதவி வழங்கும் முகாம் ஆறுமுகனேரி, காயல்பட்டினம், திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம் பகுதியைச் சோந்தோருக்கு திருச்செந்தூா் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் வியாழக்கிழமை (பிப். 9) காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூா், கயத்தாறு, வானரமுட்டி, கழுகுமலை பகுதியைச் சோந்தோருக்கான முகாம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோவில்பட்டி பிரதான கிளையில் இம்மாதம் 14ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகள், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள், தொழில் திட்ட அறிக்கை (ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்டிருப்பின்) ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.