ஏரல் பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
 
                                ஏரல் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அகரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ஜெயராஜ் (68/19) என்பவரை கடந்த 2019 ஆண்டு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் வேதக்கோவில் தெருவில் வைத்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் அகரம் பகுதியைச் சேர்ந்தவரான துரைசாமி மகன் கணேசன் (61/25) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (30.10.2025) குற்றவாளியான கணேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அரவிந் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
                         
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
