தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு புதிய டீம்! அமைச்சர் ஸ்ரீநாத் தலைமையில் களமிறங்கும் TVK!

தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு புதிய டீம்! அமைச்சர் ஸ்ரீநாத் தலைமையில் களமிறங்கும் TVK!

தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட செயலாளராக மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட செயலாளராக எஸ்.டி. ஆர். சாமுவேல்ராஜ் செயல்பட்டு வந்தார். தற்போது அவர் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு மாநில துணைச் பொது செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாவட்ட இணைச் செயலாளராக கோல்டன், பொருளாளராக சிவக்குமார், துணைச் செயலாளர்களாக சுரேஷ்குமார், கவிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக முருகேஷ், கார்த்திக் ராஜரத்தினம், பெர்க்மான்ஸ் அந்தோணி, மாரியம்மாள், ஷாமினி, இலக்கியம்மாள் (எ) அருணா, சதீஷ்குமார், ஜோசப் துரை ஆனந்த், சித்ரா, ஜனோஜ்குமார் ஆகியோரை தமிழக முதல்வரும், கட்சியின் தலைவருமான விஜய் நியமித்துள்ளார்.