தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போலீஸ் குவிப்பு... கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போலீஸ் குவிப்பு... கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பரபரப்பான சூழல் நிலவியது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பள உற்பத்தியாளர்கள், உப்பள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மனு அளிக்க வருவதாக தகவல் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, தொழிலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக அவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான கேட்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தரப்பில் தங்களது கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு... தொழிலாளர்கள் மனு... 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு! என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.