கொலை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி கைது.. குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த போது கைது!!

கொலை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி கைது.. குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த போது கைது!!

தூத்துக்குடியில் கொலை வழக்குகளில் தேடப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியை, குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த போது கடற்கரையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கீழக்கூற்றுடன்காடு பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி மீது, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும், சென்னை செங்குன்றத்தில் ஒரு கொலை வழக்கும், கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளதால், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மொட்டை அடித்து தலைமறைவாக இருந்து வந்த முத்துப்பாண்டி குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்ததை அறிந்த போலீசார், கடலில் குளித்துவிட்டு வெளியே வந்த போது மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.