முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 12 மணியளவில் அவர் பணியில் இருந்தபோது 2 மர்மநபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி (பொறுப்பு) சத்யராஜ், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மாரிமுத்து என்பவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிநிலையில், தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை நெல்லை மாவட்டம் தாழையுத்து அருகே தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.