தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.62 லட்சம் மோசடி: 3பேர் கைது!

தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.62 லட்சம் மோசடி: 3பேர் கைது!

தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.62 லட்சம் மோசடி: 3பேர் கைது!

தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.62 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி ஹார்பர் எஸ்டேட் பகுதியில் டீனோஸ் லோகநாதன் மற்றும் அவரது சகோதரரான அரிஸ்டோ லோகநாதன் ஆகியோர் ஆர்னி என்ஜினியரிங் டெக் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த தூத்துக்குடி ஸ்பிக் நகரை சேர்ந்த ஜோதி மகன் சிவசந்திரபோஸ் (37) என்பவரை முறைகேடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மேற்படி டீனோஸ் லோகநாதன் அவரை வேலையிருந்து நீக்கியுள்ளார்.

பின்னர் தங்கள் நிறுவனத்தில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் பாக்கியராஜ் (38) என்பவரை எச்.ஆர் மேலாளராகவும், தூத்துக்குடி கிரேஸ் நகரை சேர்ந்த பால்வண்ணன் மகன் செல்வகுமார் (30) என்பவரை துணை மேலாளராகவும் பணியில் சேர்த்ததையடுத்து அந்நிறுவன கணக்குகளை முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

இந்நிலையில் மேற்படி தனியார் நிறுவனத்தில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான நிறுவன கணக்குகளை ஆடிட்டர் தணிக்கை செய்தபோது, கணக்குகள் சரியான முறையில் பராமரிக்கபடவில்லை என தெரியவந்ததன் அடிப்படையில் ஆவணங்களை சரிபார்த்தபோது, மேற்படி பணி நீக்கப்பட்ட சிவசந்திரபோஸ், பணியிலிருக்கும் பாக்கியராஜ் மற்றும் செல்வகுமார் ஆகியோருடன் கூட்டுசதி செய்து சட்டத்திற்குபுறம்பாக ஆதாயமடைய வேண்டுமென்ற எண்ணத்தில், கே.வி.எம் எண்டர்பிரைசஸ் மற்றும் வேதர்சனா என்ற நிறுவனங்களின் பேரில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.12,58,705/- ரூ.பணத்தை மேற்படி டீனோஸ் லோகநாதன் நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து அனுப்பியதும், பின்னர் விசாரித்தபோது மேற்படி நிறுவனங்களின் பெயரில் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

மேலும் மேற்படி எதிரிகள் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து ரூ.49,70,000/- பணத்தை ஜே.எம் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றி அதிலிருந்து மேற்படி பணத்தை தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி மொத்தம் ரூ.62,28,705/- பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான டீனோஸ் லோகநாதன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், நாகஜோதி மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, சிவசந்திரபோஸ், பாக்கியராஜ் மற்றும் செல்வகுமார் ஆகிய 3 பேரையும் நேற்று (08.09.2023) கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.