மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 264 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!!

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 264 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!!

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 264 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்விஉதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்