சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பூவாணி பகுதியைச் சேர்ந்த சொல்லமுத்து மகன் முருகன் (50) என்பவரை கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

இவ்வழக்கை அப்போதைய கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  மாரியம்மாள் புலன் விசாரணை செய்து கடந்த 02.09.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  சுவாமிநாதன்  இன்று குற்றவாளியான முருகன் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  மாரியம்மாள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர்  ஜெபமேரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.