மழை வேண்டி வீடு வீடாக மடி பிச்சை எடுத்த மக்கள்!
மழை பெய்ய வேண்டி மக்கள் வீடு வீடாக சென்று மடிப்பிச்சை ஏந்தி உணவுப் பொருட்களை தானமாக பெற்று சாப்பிட்ட நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
சாத்தான்குளத்தில் மழை பெய்ய வேண்டி மக்கள் வீடு வீடாக சென்று மடிப்பிச்சை ஏந்தி உணவுப் பொருட்களை தானமாக பெற்று சாப்பிட்ட நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் மழை இன்றி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சாத்தான்குளம் கிருஷ்ணர் கோவில் தெருவில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு பசியால் வாடும் மக்களுக்கெல்லாம் மழை பெய்து "நெல்லு விளையட்டும்...! புல்லு விளையட்டும்...!" என பெண்கள் பாடல்கள் பாடியபடி வீடுகள் தோறும் மடிப் பிச்சை ஏந்தியபடி உணவு பொருட்களை சேகரித்தனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில் முன்பாக உணவுப் பொருட்களை மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் அனைத்து உணவையும் ஒரு அண்டாவில் போட்டு மொத்தமாக கிண்டி சாப்பிட்டனர்.
மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் மக்கள் வீடு வீடாக சென்று மடிப் பிச்சை எடுத்து உணவுப் பொருட்களை சேமித்து சமைத்து சாப்பிட்ட நிகழ்வு பார்ப்பவர்களை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.