தூத்துக்குடியில் காருக்கு வழிவிடாமல் சென்றதாக கூறி சகோதரிகள் மீது தாக்குதல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே காருக்கு வழிவிடாமல் சென்றதாக கூறி சகோதரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே காருக்கு வழிவிடாமல் சென்றதாக கூறி சகோதரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் நேற்று முன்தினம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தனது தாயை பார்த்துவிட்டு பின்னர் அவர்கள் தங்களது இருசக்கர வாகணத்தில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். ராஜாஜி பூங்கா முன்பு சென்ற போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக சென்றனர். அப்போது பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்து, சகோதரிகளை சத்தம் போட்டனர். பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே வைத்து இரு சக்கர வாகணத்தை வழிமறித்து, காரில் இருந்து இறங்கி சகோதரிகளை தாக்கிவிட்டு செல்போனை சேதப்படுத்தியதாகவும், இரு சக்கர வாகண சாவியையும் பறித்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
SC/ST வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
தூத்துக்குடி மாநகர் பழைய பஸ் நிலையம் அருகில் சகோதரிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவன் மனைவி உள்ளிட்டு மூன்று பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் என்பதால் SC/ST வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.