தூத்துக்குடியில் ரூ.515.72 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் : கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்!!

தூத்துக்குடியில் ரூ.515.72 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் : கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்!!

தூத்துக்குடியில் ரூ.515.72 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் : கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்!!

தூத்துக்குடி மாவட்டத்தில்  ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு  கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார் கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த 363 குடியிருப்புகளுக்கு ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி அடிக்கல் 23 நாட்டினார். 

விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் , மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்  சட்டமன்ற உறுப்பினர்கள்  எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்கண்டேயன் (விளாத்திக்குளம்), மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.