ப‌ணி நிரந்தரம் கோரி ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ப‌ணி நிரந்தரம் கோரி ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி மதிப்பீடு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணியாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், நகர்ப்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும், மகளிர் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுககு மதிப்பூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும்.

மகளிர் திட்டத்தை தனித்துறையாகவும், அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவந்து ஆணை பிறப்பிக்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணிவாய்ப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மாவட்ட அலுவலகத்தில் இருந்து நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப்பணியாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வாழ்வாதாரத்திட்ட களப்பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் செல்வசுந்தரி தலைமை வகித்தார். இதில் ஏராளமான ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.