தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பொங்கல் விழா: ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பொங்கல் விழா: ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

ஆட்சியர் க.இளம்பகவத் தமிழ்நாடு முதலைமைச்சரால் சென்னையில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா 14.01.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் 15.01.2026 முதல் 18.01.2026 வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலை நிகழ்ச்கிள் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பொங்கல் விழாவினை, கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரையில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. 

இவ்விழாவில் மக்கள் விரும்பும் வகையில் பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமார் 100 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்