நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மாணவர்களை வாழ்த்தி பாராட்டி பேசினார். பன்னிரெண்டாம் வகுப்பு பி பிரிவு மாணவர் சூர்யா தமிழ் 96, ஆங்கிலம் 85, இயற்பியல் 97, வேதியியல் 90, கணிதம் 98, உயிரியல் 90 மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 556 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு சி பிரிவு மாணவர் சதீஷ்குமார் தமிழ் 91, ஆங்கிலம் 67, வரலாறு 98, பொருளியல் 98, வணிகவியல் 93, கணக்குப்பதிவியல் 95 மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 542 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பி பிரிவு மாணவர் முகமது அசிம் தமிழ் 94, ஆங்கிலம் 87, இயற்பியல் 86, வேதியியல் 88, கணிதம் 89, உயிரியல் 84 மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 528 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் நினைப்பரிசு வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் முதுகலை வரலாற்று ஆசிரியை தங்கவின் நேசராணி மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.