நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம் : மேயர் , ஆணையர் பங்கேற்பு!

நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம் : மேயர் , ஆணையர் பங்கேற்பு!

தூத்துக்குடியில் நாய்களுக்கு ரேபிஸ் வெறி நாய் தடுப்பூசி போடும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் தெரிவிக்கையில்,"மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டுமென்றால் மாநகராட்சியின் கட்டணமில்லாத இந்த 18002030401 எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காக்கள் மாநகர மக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளிலும் தெருக்களுக்களிலும் நேரடியாக வந்து ஊசிகள் போடப்படும் என்று தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சஞ்சீவி ராஜ், மாநகர் நல அலுவலர் சரோஜா, திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.