தூத்துக்குடியில் இந்தியா - கானா வர்த்தகப் பரிமாற்றம் குறித்த‌ கருத்தரங்கு!

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் இந்தோ கானா வர்த்தக பரிமாற்றம் பற்றிய சிறப்புக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் சங்கத் தலைவர் தமிழரசு தலைமையில் பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது.

தூத்துக்குடியில் இந்தியா - கானா வர்த்தகப் பரிமாற்றம் குறித்த‌ கருத்தரங்கு!

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் இந்தோ கானா வர்த்தக பரிமாற்றம் பற்றிய சிறப்புக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் சங்கத் தலைவர் தமிழரசு தலைமையில் பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது. 

இச்சிறப்பு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசுகையில், தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் முக்கிய துறைமுகமாக விளங்குகிறது எனவும், மேலும் கானா பகுதியும் இந்தியாவில் உள்ள தூத்துக்குடியில் வணிக வளர்ச்சிக்கு நல்லவொரு துவக்கமாகவும் உள்ளது என அமையும் என்பதில் ஐயமில்லை என சிறப்புரையாற்றினார். 

மேலும் கானாவிலிருந்தது அஹாஃபோ மண்டல அமைச்சர் ஜார்ஜ் யாவ் போக்யா, கானாவின் கிழக்கு மண்டல அமைச்சர் க்வசி யனர கெய்ன் தலைமை பொருளாதார ஆலோசகர். நானா டிஊம் கானாவின் இந்திய ஆப்பிரிக்கா வர்த்தக சபை உறுப்பினர் பீட்டர் மென்சா மற்றும் கிங்டெம் எக்ஸிம் குழுமத் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் ராஜாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

மேலும், கானா நாட்டில் விவசாயம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும், கொக்கோ, முந்திரி உருளைகிழங்கு போன்ற விவசாய விளைப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் கானா நாட்டின் விளைநிலைங்கள் அதிகளவில் விவசாயத்திற்கு தயார்ப்படுத்தப்பட்டு அந்நாட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் தொழில் முதலீட்டாளரர்களை எங்களது கானா பகுதிக்கு தொழில் துவங்க மிகவும் அறிவுறுத்துகின்றது எனக் சுறினார். 

மேலும் கானா பகுதி எல்லா விதமான சுற்றுப்புற சூழ்நிலைகளையும், பொருளாதார முன்னேற்றங்களையும் கொண்டு காணப்படுகிறது எனவும், சுற்றுலாத்துறை மேலும் வளர அதற்கான வளர் நிலைகளையும் கூூழ்நிலைகளையும் கொண்டு விளங்குகிறது எனவும் கூறினார். ஆகவே எங்களது கானா பகுதி அகில இந்திய தொழில் சங்க முதலீட்டாளர்களை அன்புடன் அறிவுறுத்தி வரவேற்கிறது எனவும் கூறினார். 

கானா நாட்டின் கிழக்கு பகுதியில் நெல், சோயா பீன்ஸ், மக்காச்சோளம், பழச்சாறு போன்ற வியாபாரப் பொருட்களிள் கூட்டு மதிப்பு மற்றும் தொழில் நோக்கங்கள் சிறப்புற அமைகின்றது. மேலும் கானாவில் இறைச்சி உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் போன்ற செயல்முறைகளுக்கு முதலீட்டாளர்கள் கானாவில் அதிகமாக காணப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்களிள் உற்பத்தியாளர்கள் கானாவில் காணப்படுகின்றனர். 

பின்னர், கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்களில் சிலர் தங்களது உற்பத்திப் பொருட்களை கானா நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கையில், கானா நாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் இதனை தாங்கள் வரவேற்ப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். கூட்டத்தில் சங்க நிர்வாகக்குழு செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து நன்றியுரை வழங்கினார்.